மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
9 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
9 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
9 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
9 hour(s) ago
நெட்டப்பாக்கம் : ஏரிப்பாக்கம் அரசு துவக்கப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா மற்றும் இலவச பள்ளி சீருடைகள், புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஏரிப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகும்பு முதல் 3ம் வகுப்பு வரை செயல்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது பிள்ளைகளை மேல் வகுப்பு சேர்க்க கல்மண்டபம், நெட்டப்பாக்கம் அழைத்து சென்றனர். இதையடுத்து இப்பள்ளி இந்தாண்டு முதல் 4ம் மற்றும் 5ம் வகுப்புகளை கூடுதகாக சேர்க்க பள்ளிகல்வித்துறை மூலம் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து இப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு வட்டம் 4 பள்ளி துணை ஆய்வாளர் அமல்ராஜ் லீமாஸ் தலைமை தாங்கினார். பள்ளி பொறுப்பாசிரியர் கருணாநிதி முன்னிலை வகித்தார். ஆசிரியர் முகிலன் வரவேற்றார். துணை சபாநாயகர் ராஜவேலு புதிய பள்ளி வகுப்பினை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு இலவச பள்ளி சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கினார். விழாவில் விஜயசேது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை ஆசிரியர் அந்தோணிசாமி செய்திருந்தார். ஆசிரியை ஜெயலட்சுமி நன்றி கூறினார்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago