உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பல்கலைக்கழக முறைகேடு வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உத்தரவு

பல்கலைக்கழக முறைகேடு வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலை கழகம் முறைகேடு வழக்கு, அரசியல் சாசன அமர்வுக்கு விசாரணையை மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் சஞ்சய் சேகரன், இந்திய மாணவர் சங்க செயலாளர் பிரவீன்குமார் ஆகியோர் சேர்ந்து அளித்த கூட்டறிக்கை:புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் மனிதவள மேம்பாட்டு மையத்தில் பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுப்பட்டுள்ள முன்னாள் இயக்குனர் ஹரிகரன், முன்னாள் துணை வேந்தர் குர்மித் சிங், நிதி அலுவலர் லாசர் மீது உரிய விசாரணை நடத்த சி.பி.ஐ.,க்கு சங்க முன்னாள் செயலாளர் ஆனந்த் புகார் அளித்திருந்தார்.சி.பி.ஐ., நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சி.பி.ஐ., வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க கடந்தாண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து முன்னாள் துணை வேந்தர் குர்மித் சிங், பேராசிரியர் ஹரிகரன் மற்றும் பல்கலைக்கழகம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு ஊழல் தடுப்பு சட்டத்தின் 17 - A பிரிவு வருவதால், வழக்கை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வழக்கோடு சேர்த்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சுரேந்திரநாத் ஆஜரானார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை