உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி சாராயக்கடையில் பாக்கெட் சாராயம் விற்றவர் கைது; தமிழக போலீஸ் அதிரடி

புதுச்சேரி சாராயக்கடையில் பாக்கெட் சாராயம் விற்றவர் கைது; தமிழக போலீஸ் அதிரடி

நெல்லிக்குப்பம் : புதுச்சேரி மாநில சாராயக்கடையில் பாக்கெட் சாராயம் விற்றவரை தமிழக போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி மாநில சாராயக்கடைகளில், பாட்டிலில் மட்டுமே சாராயம் விற்க வேண்டும். பாக்கெட்டுகளில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல கடைகளில் சட்ட விரோதமாக பாக்கெட்டுகளில் அடைத்து சாராயம் விற்பனை செய்கின்றனர். இதனால், புதுச்சேரி மாநில எல்லையொட்டிய கடலூர், விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் புதுச்சேரியில் இருந்து பாக்கெட் சாராயம் கடத்தி வந்து விற்கப்படுகிறது.இதை தடுக்க இரு மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் குருவிநத்தம் சாராயக்கடையில் சட்டவிரோதமாக பாக்கெட் சாராயம் விற்பதாக தகவல் கிடைத்தது.அதன்பேரில், பண்ருட்டி மதுவிலக்கு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் குருவிநத்தம் சாராயக்கடையில் அதிரடியாக சோதனை நடத்தி, அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 845 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடை விற்பனையாளர் திருப்பணாம்பாக்கம் முருகன், 47: என்பவரை கைது செய்தனர். மேலும், கடை உரிமையாளர் குருவிநத்தம் கார்த்திக்கை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Karthikeyan Karthik
ஆக 01, 2024 13:27

இது நல்ல ஒரு விஷயம் புதுச்சேரி மக்களுக்கு பெரும்பாலான மக்களுக்கு இது சரிவர தெரியல இது போன்ற ஒரு விதிமுறை இருப்பது இப்பதான் எங்களுக்கு சாரி எனக்கே தெரிகிறது தமிழக காவல்துறை சரியான நடவடிக்கை எடுத்துள்ளார் எடுத்துள்ளார்கள்


முக்கிய வீடியோ