உள்ளூர் செய்திகள்

பனை விதை நடவு பணி

பாகூர் : பூரணாங்குப்பம் தனசுந்தரம்பாள் சாரிடபிள் சொசைட்டி, சென்னை காயத்ரி சாரிட்டிஸ் மற்றும் ரெயின் மழைத்துளி, உயிர்த்துளி தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் பாகூர் அடுத்துள்ள பூரணாங்குப்பம் கிராமத்தில் பனை விதை நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, பனை விதை நடவு செய்யும் பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, பூரணாங்குப்பம் பனை ஆனந்தன், குடியிருப்புபாளையம் கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் ராமமூர்த்தி, செல்ல வீரன், பழனிச்சாமி, பாலசுப்பிரமணியன், வினோத்குமார், மகேந்திரன் மற்றும் ஊர் பொது மக்கள் பங்கேற்று நீர்நிலைகளின் கரையில் பனை விதையை நடவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ