உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் துறை தனியார் மயமாக்கல் கூட்டத்தில் பங்கேற்பதா? முன்னாள் எம்.எல்.ஏ., கண்டனம்

மின் துறை தனியார் மயமாக்கல் கூட்டத்தில் பங்கேற்பதா? முன்னாள் எம்.எல்.ஏ., கண்டனம்

புதுச்சேரி: யூனியன் பிரதேச மின் துறை தனியார்மயமாக்குதல் கூட்டத்தில் புதுச்சேரி பங்கேற்றதை ஏற்க முடியாது என, அ.தி.மு.க., மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: புதுச்சேரி மக்கள் வரிப்பணத்தின் மூலம் பல நுாறு கோடி சொத்துக்களுடன் மின்துறை லாபகரமாக இயங்கி வருகிறது. மக்கள் நலனுக்கு விரோதமாக மின்துறையை தனியார்மயமாக்க புதுச்சேரி அரசு முனைப்பு காட்டியது. இதை எதிர்த்து, மின்துறை ஊழியர்கள் நீதிமன்றத்தை நாடினர். அரசின் செயல்பாடுகளுக்கு கடந்த லோக்சபா தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதையடுத்து புதுச்சேரி சட்டசபையில் முதல்வர், சபாநாயகரும், அமைச்சரும் மின்துறை தனியார்மயமாக்கப்படாது என தெரிவித்தனர்.இந்நிலையில் இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார்மயமாக்குவது தொடர்பான காணொலி வாயிலான ஆலோசனைக்கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்தது. இதில் புதுச்சேரி அரசு சார்பில் அதிகாரிகள் பங்கேற்றனர். இதை ஏற்க முடியாது. கூட்டத்தில் என்ன பேசினர் என்பதை வெளிப்படையாக மக்களிடம் தெரிவிக்க வேண்டும். புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்குவதை ஏற்க மாட்டோம் என உறுதிபட மத்திய அரசு நடத்தும் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ