மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
4 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
4 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
4 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
4 hour(s) ago
புதுச்சேரி: புத்த பூர்ணிமாவையொட்டி, விடுமுறை அறிவிக்கப்பட்டதை அறியாமல், ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் ஏமாற்றம் அடைந்தனர். புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள, ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுகள், புத்த பூர்ணிமாவையொட்டி இயங்காது என்றும், அன்றைய தினம் நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் கடந்த, 21,ம் தேதி அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.ஆனாலும், அவசர சிகிச்சை பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும், இதற்கான அறிவிப்பு மருத்துவமனை நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதனை அறியாமல் திருவண்ணாமலை, வேலுார், விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களை சேர்ந்த, ஏராளமான நோயாளிகள் நேற்று காலை 6:00 மணி முதல் ஜிப்மர் மருத்துவமனைக்கு வரத்துவங்கினர். மருத்துவமனை நுழைவுவாயிலில் இருந்தகாவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி, வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது என்று தெரிவித்து அவர்களை திருப்பி அனுப்பினர். இதனால் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago