மேலும் செய்திகள்
அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்
15 hour(s) ago
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
15 hour(s) ago
புதிய அங்கன்வாடி அமைக்க பூமி பூஜை
15 hour(s) ago
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
15 hour(s) ago
புதுச்சேரி : அடிப்படை வசதியை மேம்படுத்தாததை கண்டித்து, செல்லம்பாப்பு நகரவாசிகள் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.உழவர்கரை தொகுதியில் உள்ளது ரெட்டியார்பாளையம் செல்லம்பாப்பு நகர். இங்கு 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் பாதாள சாக்கடை திட்டம் முழுமை அடையாமல் அரைகுறையாக விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கழிவு நீர் சாலையில் வழிந்தோடி துர்நாற்றம் வீசுகிறது.அப்பகுதியில் சுகதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக செல்லம்பாப்பு நகர குடியிப்பு நல சங்கம் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் நகரின் அடிப்படை வசதி பிரச்னை தீர்க்காததால் லோக்சபா தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago