உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அறுவை சிகிச்சைக்கு உதவி கோரி மனு

அறுவை சிகிச்சைக்கு உதவி கோரி மனு

புதுச்சேரி: கண் அறுவை சிகிச்சை செய்ய உதவி செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். மதகடிப்பட்டு அருகே உள்ள பி.எஸ்., பாளையம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி பழனியம்மாள், 38; இவருக்கு பிறவிலேயே ஒரு கண் பார்வை இல்லாமல் உள்ளது. இந்நிலையில், பார்வை தெரிந்த மற்றோரு கண்ணில், பிரச்னை ஏற்பட்டது. கண் மருத்துவமனையில் பரிசோதனை செய்த அவர், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், இல்லை எனில், ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இதுகுறித்து, அந்த பெண், புதுச்சேரி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில், மாற்றுத்திறனாளியான தனக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய உதவி செய்ய வேண்டும். குடியிருக்க சொந்தமாக வீடு வழங்க வேண்டும் என, கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்