உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெட்ரோல் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை

பெட்ரோல் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை

புதுச்சேரி: முன்விரோதத்தில் நள்ளிரவில் ரவுடி வீட்டு முன் பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.உருளையான்பேட்டை முருகன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கோவில் திருவிழாவின்போது படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் உருளையான்பேட்டை போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த எழில் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து காலப்பட்டு சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் ருத்ரேஷ் ஆதராவளர் சிலர், நேற்று இரவு 11:45 மணியளவில் எழில் வீட்டு முன் பெட்ரோல் குண்டு வீசினர். சத்தம் கேட்டு எழில் அம்மா மற்றும் மனைவி வெளியே வந்து பார்த்துவிட்டு, அலறினர்.தகவலறிந்த உருளையான்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ