உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதல்வர் பிறந்தநாளையொட்டி 7,500 பனை விதைகள் நடும் பணி

முதல்வர் பிறந்தநாளையொட்டி 7,500 பனை விதைகள் நடும் பணி

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமியை பிறந்தநாளையொட்டி அகில இந்திய என்.ஆர்.காங்., மாநில செயலாளர் குமரகுரு தலைமையில் பனை விதைகள் நடப்பட்டன.புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்த நாள் விழா, அகில இந்திய என்.ஆர்.காங்., மாநில செயலாளர் குமரகுரு தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முதல்வர் ரங்கசாமி 75வது பிறந்தநாளையொட்டி, மணவெளி தொகுதிக்குட்பட்ட என்.ஆர்.நகர்., சங்கராபரணி ஆற்றில் 2.65 கோடி மதிப்பீட்டில் புதிதாக பலப்படுத்தப்பட்ட கரையின் மீது, 7,500 பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது. என்.ஆர்.காங்., மாநில செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி பனைவிதை நடும் பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து ஆற்றங்கரையோரமும் நடப்பட்டது.மணவெளி தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர்கள், உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்