உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

விழுப்புரம், : விழுப்புரம் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த வாலிபர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி, அதே பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் பெற்றோர், உறவினர்கள் சேர்ந்து அந்த சிறுமியை கொளப்பாக்கத்தை சேர்ந்த அய்யப்பன்,28; என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இது குறித்து, முகையூர் வட்டார விரிவாக்க அலுவலர் கண்ணகி, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், அய்யப்பன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கும், மாணவியின் பெற்றோர் ஏழுமலை, செல்வி, உறவினர்கள் அய்யனார், தனலட்சுமி ஆகிய 4 பேர் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் போலீசார் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி