உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீஸ் பயிற்சி நிறைவு அணிவகுப்பு ஒத்தி வைப்பு

போலீஸ் பயிற்சி நிறைவு அணிவகுப்பு ஒத்தி வைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி 27வது பேட்ஜ் போலீஸ் பயிற்சி நிறைவு அணிவகுப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் எதிரொலியால் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் புதிதாக தேர்வாகிய 27வது பேட்ஜ் போலீசாருக்கு, பயிற்சி நிறைவு அணிவகுப்பு, கோரிமேடு காவலர் பயிற்சி மைதானத்தில் நேற்று (10ம் தேதி) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், முதல்வர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்ள இருந்தனர். இந்நிலையில், சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர்(10ம் தேதி) துவங்கியது. இதன் எதிரொலியாக போலீசாருக்கான பயிற்சி நிறைவு அணிவகுப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி