மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
புதுச்சேரி: போலீஸ் வாகனம் இயக்கும் டிரைவர்கள் அனைவரும் கட்டாயம் சீருடையில் இருக்க வேண்டும் என, பயிற்சி முகாமில் வலியுறுத்தப்பட்டது.புதுச்சேரி போலீசில் சட்டம் ஒழுங்கு, ஊர்காவல் படை, ஐ.ஆர்.பி.என்., பிரிவில் பணியாற்றும் அனைத்து டிரைவர்களுக்கும், வாகன ஓட்டுதல் குறித்த பயிற்சி முகாம் கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளியில் நடந்தது.பயிற்சி முகாமினை, பயிற்சி பள்ளி எஸ்.பி., ரங்கநாதன் துவக்கி வைத்தார். எஸ்.பி., நல்லாம்பாபு, முருகவேல் மற்றும் ஓய்வு பெற்ற வட்டார போக்குவரத்து அதிகாரி ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.போலீஸ் வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் சீருடையில் இருப்பது அவசியம். வாகனத்தின் லாக் புக், ரெக்கார்டுகளை சரியாக பராமரிக்க வேண்டும். வாகன போக்குவரத்து சட்டதிட்டங்களை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.மகேந்திரா கார் நிறுவன மெக்கானிக்குகள், பொலிரோ வாகனத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago