மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
6 hour(s) ago
புதுச்சேரி: பிரதமர் சூரிய ஒளி இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில், புதுச்சேரி அஞ்சலக கோட்டத்தில் 30,448 பேர் பதிவு செய்துள்ளனர்.கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி சூரிய சக்தி மற்றும் நிலையான முன்னேற்றத்தை அதிகரிக்க பிரதமர் சூரிய ஒளி இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை துவக்கினார்.இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு மானியத் தொகையில் சோலார் பேனல் அமைத்து, 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கவும், மேலும் உற்பத்தியாகும் மின்சாரத்தை கொள்முதல் செய்யும் வகையில் இத்திட்டம் செயல்பட உள்ளது.இதில் வீட்டின் மாடி மற்றும் கூரைகளில் அமைக்கப்பட உள்ள சோலார் பேனல் ஒரு கிலோ வாட்டிற்கு 30 ஆயிரம், இரண்டு கிலோ வாட்டிற்கு 60 ஆயிரம், மூன்று கிலோ வாட் அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்புகளுக்கு 78 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் இத்திட்டத்தில் இணைவதற்கு வசதியாக நாடு முழுதும் உள்ள தபால் துறையின் மூலம் பயனாளிகள் விண்ணப்பிக்கும் பணி கடந்த மார்ச் மாதம் துவங்கியது.அதில் வீடு தேடி வரும் தபால்காரிடம் பதிவு செய்வதற்கு வசதியாக பிரத்தியேக செயலி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. புதுச்சேரி அஞ்சலக கோட்டத்தின் கீழ் புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம், அவலுார்பேட்டை, காணை தபால் நிலையங்கள் இயங்கி வருகின்றன.இதில் மூன்று தலைமை தபால் நிலையம், 68 துணை தபால் நிலையம், 324 கிளை தபால் நிலையங்கள் உள்பட 395 தபால் நிலையங்களில் மொத்தம் 30,448 பேர் இத்திட்டத்தில் விண்ணப்பித்துள்ளனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago