மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
17 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
17 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
17 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
17 hour(s) ago
புதுச்சேரி, : அதிக சூரிய வெப்பத்தால் உருவாகும் அயர்ச்சி மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு செய்திக்கறிப்பு:சாதாரண மனித உடல் வெப்பநிலை 36.4 டிகிரி செல்ஷியஸ் முதல் 37.2 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். அதிக சூரிய வெப்பத்தால் அயர்ச்சி மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஹீட் ஸ்ட்ரோக் உயிருக்கு ஆபத்தான நிலையாகும். இது உடல் அதிக வெப்பம் வெளிப்பாட்டை கையாள முடியாத போது ஏற்படுகிறது.தலைவலி, தலை சுற்றல், மயக்கம், தீவிர தாகம், குமட்டல் அல்லது வாந்தி, வழக்கத்திற்கு மாறாக அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தல், விரைவான சுவாசம், இதய துடிப்பு வெப்ப அயர்ச்சியின் அறிகுறிகள்.ஆனால் ஹீட் ஸ்ட்ரோக்கின் அறிகுறிகள் என்பது உடலில் உயர் வெப்பநிலை, தலைவலி, தலைசுற்றல், மயக்கம், தசை பலவீனம், தசை பிடிப்புகள், குமட்டல் மற்றும் வாந்தி, விரைவான இதயத்துடிப்பு, தெளிவற்ற பேச்சு, சூடான வறண்ட தோல், நடை தடுமாற்றம், குழப்பம் மற்றும் எரிச்சல் வலிப்பு அல்லது கோமா ஆகியவற்றுடன், சுயநினைவுவின்மை, அதிக சூரிய வெப்பத்தால் ஏற்படலாம்.அயர்ச்சி மற்றும் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இவ்வாறு ஒருவருக்கு அயர்ச்சி மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் பொழுது அருகில் இருப்பவர்கள், பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவ உதவிக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.பாதிக்கப்பட்டவர்களை குளிர்ந்த நிழல் பகுதிக்கு மாற்றி அதிகப்படியான ஆடைகளை அகற்றி, பாதங்களை சற்று உயர்த்தி படுக்க வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர் விழிப்புடன் இருந்தால், குடிக்க முடிந்தால் குளிர் திரவங்களை வழங்கலாம்.தண்ணீர், மோர், எலும்பிச்சை சாறு, உப்பு நீர் கரைசல் (ஒ.ஆர்.எஸ்) அல்லது குளிர்ந்த நீரை சுயநினைவு உள்ளவர்களுக்கு மட்டும் குடிக்க வழங்க வேண்டும். ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவின்றி இருந்தால் அவரை விரைவாக குளிர்விப்பது மிக முக்கியமான முதல் உதவி.அதற்கு அவரின் ஆடைகளை தளர்த்தி குளிர்ந்த நீரினை உடம்பில் ஒற்றி எடுக்கவும். குறிப்பாக அக்குள் மற்றும் கவட்டியில் ஈரத்துண்டு, ஐஸ்பேக் உடலில் ஒற்றி எடுக்க வேண்டும். மின் விசிறியின் காற்று உடலில் படும்படி வைக்கவும், குளிர்சாதன அறை (ஏ.சி. ரூம்) கிடைத்தால் அதனை பயன்படுத்தி கொள்ளலாம்.உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். உதவிக்கு 108 ஆம்புலன்சை உடனடியாக அழைக்கவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago