உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வில்லியனுார், ஊசுடு அணிகள் வெற்றி

பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வில்லியனுார், ஊசுடு அணிகள் வெற்றி

புதுச்சேரி: புதுச்சேரி பிரீமியர் லீக் போட்டி வில்லியனுார் மோகித் கிங்ஸ், ஊசுடு அக்கார்ட் வாரியஸ் அணிகள் வெற்றி பெற்றன.துத்திப்பட்டு, சீகெம் விளையாட்டு அரங்கில், புதுச்சேரி பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. நேற்று காலை நடந்த போட்டியில் ஏனாம் ராயல்ஸ், வில்லியனுார் மோஹித் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஏனாம் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில், 173 ரன்கள் எடுத்தது. ஏனம் ராயல்ஸ் அணியின் கங்கா ராஜூ 33 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்.தொடர்ந்து ஆடிய வில்லியனுார் மோஹித் கிங்ஸ் அணி 16.2 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 175 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் அமன் கான் 23 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.மதியம் நடந்த போட்டியில், ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ், காரைக்கால் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய காரைக்கால் நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்தது . விக்னேஸ்வரன் மாரிமுத்து 40 பந்துகளில் 69 ரன்கள் அடித்தார். தொடர்ந்து ஆடிய ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 188 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஆயுத் ஷர்மா 45 பந்துகளில் 84 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ