உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு

பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு

புதுச்சேரி: பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.காமராஜர் நகர் தொகுதி, ஜீவா நகர் பகுதியில் அமைந்துள்ள ஏழைமுத்து மாரியம்மன் கோவிலில் ஆடி மாத விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள், சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா கோவில் விழா கமிட்டி சார்பில் நடந்தது. விழாவில் காமராஜர் தொகுதியின் காங்., பொறுப்பாளர் தேவதாஸ் தலைமை தாங்கி, பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்கள், கிரிக்கெட் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.நிகழ்ச்சியில், ஜீவா நகர் சேகர், விஜயலட்சுமி பெட்ரோல் பங்க் மணி காங்., அயலக அணி தலைவர் டூப்லெக்ஸ் பரந்தாமண், காங்., நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை