உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சார்பு செயலர்கள் புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது வழக்கு

சார்பு செயலர்கள் புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது வழக்கு

புதுச்சேரி, : அரசு சார்பு செயலர்கள் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் ஓட்டியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.புதுச்சேரியில் ஒரு சதவீதம் வசிக்கும் இ.டபிள்யூ.எஸ்., பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கொடுத்து, புதுச்சேரி மக்களின் கல்வி வேலை வாய்ப்பை பறிக்கும் சார்பு செயலர்கள் வாகனத்தை மறித்து முற்றுகை போராட்டம் என, சார்பு செயலர்களின் புகைப்படத்துடன் தி.வி.க.,வினரின் போஸ்டர்கள் புதுச்சேரி முழுதும் ஒட்டப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து, சப்கலெக்டர் அர்ஜூன் ராமக்கிருஷ்ணன் வெளியிட்ட உத்தரவில், அரசு அதிகாரிகளின் புகைப்படத்துடன் பொது இடங்களில் ஆட்சேபனைக்கு உரிய வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இத்தகைய செயல் அரசு ஊழியர்கள் பணி செய்வதில் இடையூறு செய்வது, புதுச்சேரி திறந்தவெளி அழகை சீர்கெடுக்கும் சட்டத்தின் கீழ் குற்றமாகும். இந்த போஸ்டர்களை 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும். மீறினால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார். ஆனால், போஸ்டர்கள் அகற்றப்படவில்லை. இதைத் தொடர்ந்து, பெரியக்கடை போலீசார் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது புதுச்சேரி திறந்தவெளி அழகு சீர்கெடுக்கும் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை