உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விளம்பர செய்தி விஸ்வகர்மா திட்ட கருத்தரங்கு 

விளம்பர செய்தி விஸ்வகர்மா திட்ட கருத்தரங்கு 

புதுச்சேரி : மாநில அளவிலான வங்கியாளர் குழு சார்பில் விஸ்வகர்மா திட்டத்தின் பயனாளிகளுக்கான கருத்தரங்கு வரும் 28ம் தேதி நடக்கிறது.மாநில அளவிலான வங்கியாளர் குழு சார்பில், பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் பயனாளிகளுக்கு வரும் 28ம் தேதி கருத்தரங்கு நடக்கிறது. புதுச்சேரி மாவட்ட தொழில் மையத்தின், பயிற்சி வளாகத்தில் மாலை 3:00 மணி முதல், 5:00 மணி வரை நடக்கிறது.இந்த கருத்தரங்கில் விஸ்வகர்மா திட்டத்தின் பயனாளிகள் வங்கியின் மூலம் கடன் பெற்று பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து முன்னோடி வங்கி மேலாளர் சதீஷ்குமார் விளக்கம் அளிக்கிறார். கூட்டத்தில், எம்.ஓ.எம்.எஸ்.எம்.இ., டெவலப்மெண்ட் மற்றும் பெசிலிடேஷன் அதிகாரிகள், தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள், மாவட்ட தொழில் மையத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டு, இத்திட்டம் சம்பந்தப்பட்ட துறைகளின் பங்களிப்பை விளக்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ