உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கல்

புதுச்சேரி : காலாப்பட்டு தொகுதியில் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ., லேப்டாப் வழங்கினார்.புதுச்சேரி அரசு கல்வித்துறை மூலம் அரசு பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பு படிக்கும், மாணவ, மாணவியருக்கு, இலவச லேப்டாப் வழங்கும் விழா, காலாப்பட்டு சட்டசபை தொகுதியில் நடந்தது.விழாவில், கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ., கலந்து கொண்டார். பெரிய காலாப்பட்டு பகுதி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கினார்.இதில் கணபதிசெட்டிக்குளம், பெரிய காலாப்பட்டு, சின்னக் காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி ஆகிய கிராமங்களை சேர்ந்த கிராம பஞ்சாயத்தார், பா.ஜ., பிரமுகர்கள், பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ