| ADDED : ஆக 22, 2024 02:04 AM
வில்லியனுார், : சுல்தான்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் ரெயின் கோட் ஆகியவற்றை எதிர்க்கட்சி தலைவர் சிவா வழங்கினார்.சுல்தான்பேட்டை, கண்ணியமிகு காயிதே மில்லத் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் 33 பேருக்கு லேப்டாப், பத்தாம் வகுப்பு மாணவர்கள் 55 பேருக்கு ரெயின் கோட் ஆகியவற்றை சிவா எம்.எல்.ஏ., வழங்கினார்.நிகழ்ச்சியில் பள்ளி பொறுப்பு விரிவுரையாளர் ராமலிங்கம், ஆசிரியர்கள் விஜயலட்சுமி, அனிதா ஜெனிபர், ஆனந்தராஜ், ராஜசேகர், சாந்தகுமார், தி.மு.க., பிரமுகர்கள் மணிகண்டன், ராமசாமி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.