| ADDED : ஜூன் 23, 2024 05:14 AM
புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகம் முருக பெருமானின் ஆறுபடை வீடு கோவில்களை தரிசிக்க, சுற்றுலா வளர்ச்சி கழகம் சிறப்பு சுற்றுலா பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது.புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகம் பல்வேறு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, முருக பெருமானின் ஆறுபடை வீடுகளான சுவாமிமலை, திருச்செந்துார், திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, பழனி, திருத்தணி மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, காஞ்சிபுரம் ஆகிய கோவில்களை காண சிறப்பு சுற்றுலா பேக்கேஜ் அறிமுகம் செய்துள்ளது. வரும் ஜூலை 12 முதல் 15ம் தேதி வரை, 3 இரவு, 4 பகல் என்ற சுற்றுலா திட்டத்தில், ஏ.சி., வாகனத்தில் பயணம், தங்கும் இடம் சேர்த்து டிக்கெட் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 8,750, சிறார்களுக்கு ரூ. 6,125 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் வேண்டும் என விரும்புவோர், புஸ்சி வீதி, கடற்கரை சாலை சந்திப்பில் உள்ள புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.