உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரி சென்டாக்கில் நீட் மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான வரைவு தரவரிசைப்பட்டியல் இணையதளத்தில் www.centacpuducherry.inநேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் அரசு, நிர்வாகம், சிறுபான்மையினர், வெளிநாட்டு வாழ் இந்தியவர்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி அரசு ஒதுக்கீட்டில் மாணவி ருத்ரா நீட் தேர்வில் 684 மதிப்பெண்கள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 682 மதிப்பெண் பெற்ற நிதர்சனா 2ம் இடம், 681 மதிப்பெண் எடுத்து பிரதீப்சக்ரவர்த்தி 3ம் இடத்தில் உள்ளார்.இதில் ஆட்சேபனைகள் இருந்தால் வருகிற 20ம் தேதி காலை 11:00 மணிக்குள் தெரிவிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களின் விருப்பப்பாடங்களை தேர்வு செய்வது கட்டாயமாகும். மாணவர் சேர்க்கை சம்பந்தமான சந்தேகங்களுக்கு dhtepdy.edu.inஎன்ற இ-மெயில் முகவரியிலும் 0413-2655570, 2655571 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இந்த தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை