மண்புழு உரம் தொட்டி மானியத்தில் அமைக்க தகுதியான விவசாயிகள் பட்டியல் வெளியீடு
புதுச்சேரி: மண்புழு உரம் தொட்டி மாண்யம் பெற விண்ணப்பித்த விவசாயிகள் பெயர்கள் உழவர் உதவியகம் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.இதுகுறித்து இணை வேளாண் இயக்குனர் தோட்டக்கலை சண்முகவேலு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, கூடுதல் வேளாண் இயக்குனர் (தோட்டக்கலை) அலுவலகம் மற்றும் புதுச்சேரி மாநில தோட்டக்கலை வளர்ச்சி சங்கம் சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் புதுச்சேரி பிராந்திய தோட்டக்கலை விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை திட்டத்தின் மூலம் மண்புழு உரம் தொட்டி அமைப்பதற்கு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.மண்புழு உரம் தொட்டி மானிய விலையில் அமைப்பதற்கு விண்ணப்பித்த தகுதியான விவசாயிகளின் பெயர் பட்டியல் சமுதாய தணிக்கை செய்வதற்காக தங்கள் பகுதிக்குட்பட்ட உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் நேற்று முதல் வரும் 12ம் தேதி வரை ஒட்டப்பட்டுள்ளது. மேலும் https://agri.py.gov.inஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் வரும் 12ம் தேதிக்குள் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் உள்ள கூடுதல் வேளாண் இயக்குனர் (தோட்டக்கலை), அலுவலகத்தில் எழுத்து பூர்வமாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.