உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளிகள் திறக்கும் நாளில் பாட புத்தகம், நோட் புக் புதுச்சேரி கல்வித்துறை சுறுசுறு

பள்ளிகள் திறக்கும் நாளில் பாட புத்தகம், நோட் புக் புதுச்சேரி கல்வித்துறை சுறுசுறு

புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 89 ஆயிரம் மாணவர்களுக்கு பாட புத்தகம், நோட் புக், சீருடை துணிகள் ஆகியவற்றை பள்ளிகளுக்கு அனுப்பும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து, வரும் ஜூன் 6ம் தேதி, அரசு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறக்கும் தினத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகம், நோட் புக், சீருடை துணி மற்றும் தையல் கூலி ஆகியவற்றை ஒரே நேரத்தில் வழங்குமாறு, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் பிரியதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.அரசு பள்ளிகளில் படிக்கும் 77 ஆயிரம் மாணவர்களுக்காக, பெங்களூருவில் இருந்து 3 கோடியே 18 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் செலவில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் சி.பி.எஸ்.இ., பாட புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது.இதில், தமிழ்நாடு பாடநுால் கழகத்தில் இருந்து தமிழ்ப் புத்தகம் மட்டும் வாங்கப்பட்டுள்ளது. மேலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 12 ஆயிரம் மாணவர்களுக்காக தமிழக கல்வி வாரிய பாட திட்ட புத்தகங்களும் வாங்கப்பட்டுள்ளது.மதுரையில் இருந்து 3 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் 14 லட்சத்து 50 ஆயிரம் நோட் புக் வாங்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா கொல்க்காபூரில் இருந்து 3 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் ஐந்தரை லட்சம் மீட்டர் சீருடை துணி வாங்கப்பட்டுள்ளது. சீருடை துணிகளை வழங்கும்போதே தையல் கூலியும் வழங்குவதற்காக 2 கோடியே 92 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.பாட புத்தகம், நோட் புக் மற்றும் சீருடை துணிகள் அனைத்தையும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 433 பள்ளிகளுக்கு அனுப்பும் பணி, துணை இயக்குனர் முனுசாமி தலைமையில் கண்காணிப்பாளர் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.இதில், கடந்த ஏப்ரல் மாதமே பாட புத்தகங்கள் மட்டும் அனுப்பப்பட்டு விட்டது. நோட் புக், சீருடை துணி ஆகியவற்றை அனுப்பும் பணி மட்டுமே நேற்றுமுன்தினம் துவங்கி வேகமாக நடந்து வருகிறது.

சீருடை கலர் என்ன?

இந்தாண்டு, மூன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பிற்கு பாடத்திட்டம் மாறுவதால் அந்த வகுப்பிற்கான பாட புத்தகங்கள் மட்டும் விரைவில் வர உள்ளது. புதுச்சேரியில் அரசு உதவி பெறும் பள்ளிகள் சி.பி.எஸ்.சி.இ., பாடப் பிரிவுக்கு மாறாததால், அவர்களுக்கு மட்டும் மாநில பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நோட் புக், புதுச்சேரி அரசு அச்சகத்தில் தயார் செய்து வழங்கப்பட்டு வந்தது. அவர்களின் காலதாமதமான சேவையால் இந்த ஆண்டு மத்திய அரசின் 'ஜெம்' போர்ட்டல் மூலம் 14 லட்சத்து 50 ஆயிரம் நோட் புக் வாங்கப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு பீட்டா நீலத்தில் பேண்ட், ஒயிட் அண்ட் நேவி கலரில் சட்டை, மாணவிகளுக்கு இதே நிறத்தில் சுடிதார், துப்பட்டா ஆகியவை வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்