உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி அரசு கூட்டுறவு கல்வியியல் கல்லுாரி பி.எட்., படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி அரசு கூட்டுறவு கல்வியியல் கல்லுாரி பி.எட்., படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி : புதுச்சேரி அரசு கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் பி.எட். படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லூரி மேலாண் இயக்குநர் மாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் 2024--25ம் கல்வி ஆண்டின் பி.எட்., 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பட்டப்படிப்பு முடித்த மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்கள் கல்லுாரியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இன்று 3ம் தேதி முதல் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான நகல் சான்றிதழ்களுடன் தபால் மூலம் அல்லது நேரில் சமர்ப்பிக்கலாம்.இந்த பி.எட். படிப்பின் சேர்க்கைக்கான கல்வி தகுதிகள், கட்டண விபரம் உள்ளிட்ட தகவல்கள் www.ccepdy.inஎன்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.அனைத்து அலுவலக நாட்களில் கல்லுாரியை நேரில் அணுகி தகவல் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 0413-2331407 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 18ம் தேதி கடைசி நாளாகும்.தகுதியுள்ள வெளிமாநில விண்ணப்பிக்கலாம். புதுச்சேரி சேர்ந்த மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு பிறகு காலியிடங்கள் இருப்பின் பிற மாநிலத்தவரின் விண்ணப்பங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பரிசீலிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ