உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நேபாள நாட்டின் சபாநாயகருடன் புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு

நேபாள நாட்டின் சபாநாயகருடன் புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு

புதுச்சேரி: நேபாள நாட்டிற்கு சென்றுள்ள புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள், அந்நாட்டு முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்தித்தனர்.புதுச்சேரி மாநில எம்.எல்.ஏ.,க்களுக்கு, நேபாளம் நாட்டின் கண்டகி பிரதேச சட்டப்பேரவை செயலகம் சார்பில், அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரி மாநில எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் செல்வம் தலைமையில், நேபாளம் கண்டகி பிரதேச சட்டசபையை பார்வையிட சென்றனர்.அங்கு, நேற்று புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் குழுவினரை, கண்டகி சபாநாயகர் கிருஷ்ணன் ஜிட்டா உள்ளிட்டோர் வரவேற்றனர். இதனை தொடர்ந்து, புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள், கண்டகி பிரதேச முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை