மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
42 minutes ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
42 minutes ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
53 minutes ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
54 minutes ago
புதுச்சேரி: போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான இரண்டு நாள் விழிப்புணர்வு கேரம் போட்டி துவங்கியது.புதுச்சேரி காவல் துறை சார்பாக இளைஞர்களிடம் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இரண்டு நாள் கேரம் விளையாட்டுப் போட்டி நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டி வாணரபேட்டை அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று துவங்கியது. கேரம் விளையாட்டு பயிற்சியாளர் சதீஷ் வரவேற்றார்.போட்டிகளை சிறப்பு விருந்தினரான சீனியர் எஸ்.பி., நாராசைதன்யா துவக்கி வைத்தார்.கிழக்கு எஸ்.பி., லட்சுமி சவுதன்னியா, எஸ்.பி.,க்கள் வம்சிதரெட்டி, பக்தவச்சலம், வீரவல்லவன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் சத்திய நாராயணன், செந்தில்குமார், புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கத் தலைவர் வளவன், அமலோற்பவம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கேரம் விளையாட்டுப் போட்டியில் 200க்கும் மேற்பட்ட கேரம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.சந்தோஷ் குமார் நன்றி கூறினார்.
42 minutes ago
42 minutes ago
53 minutes ago
54 minutes ago