உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி பிரீமியர் லீக் கோலகலமாக துவக்கம்

புதுச்சேரி பிரீமியர் லீக் கோலகலமாக துவக்கம்

புதுச்சேரி : கிரிக்கெட் அஸோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி சார்பில், பாண்டிச்சேரி பிரீமியர் லீக் போட்டி துவக்க விழா நேற்று நடந்தது.இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம் பிரீமியர் போட்டி நடத்த அனுமதி அளித்துள்ளது. அதன்பேரில், கிரிக்கெட் அசோசியஷன் ஆப் பாண்டிச்சேரி சார்பில், பாண்டிச்சேரி பிரீமியர் லீக் போட்டி துத்திப்பட்டு சீகெம் ஸ்டேடியத்தில் நேற்று 5ம் தேதி துவங்கி வரும் 23ம் வரை நடக்கிறது. இதில், வைட் டவுன் ஜென்ட்ஸ், வில்லியனுர் மோஹித் கிங்ஸ், உசுடு அக்கார்ட் வாரியர்ஸ், காரைக்கால் நைட் ரைடர்ஸ், மாஹே மெகலோ ஸ்டைகர்ஸ் , ஏனாம் ராயல்ஸ் என 6 அணிகள் பங்கு பெறுகின்றன. நேற்று மாலை 6:15 மணிக்கு பிரீமியர் போட்டி துவக்க விழா நடந்தது. போட்டிகளை கிரிக்கெட் அஸோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி கவுரவத் தலைவர் தாமோதரன் தொடங்கி வைத்தார்.விழாவில் கிரிக்கெட் அஸோசியேஷன் ஆப் பாண்டிச்சே கவுரவ செயலாளர் ராமதாஸ், பாண்டிச்சேரி பிரீமியர் லீக் தலைவர் மகேஷ் மற்றும் கிரிக்கெட் அஸோசியேஷன் ஆப் பாண்டிச்சேரியின் நிவாகிகள் கலந்து கொண்டனர்.முன்னதாக மதியம் 2:45 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் காரைக்கால் நைட் ரைடர்ஸ் அணியும், மாஹே மெகலோ ஸ்டைகர்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய காரைக்கால் நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 140 ரன்கள் எடுத்து. தொடர்ந்து ஆடிய மாகே மெகலோ ஸ்டைகர்ஸ் அணி 15.3 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 141 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 40 ரன்கள் அடித்த மாஹே மெகலோ ஸ்டைகர்ஸ் அணியின் ராகவன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.இரவு 7 மணிக்கு தொடங்கிய போட்டியில் வில்லியனுர் மோஹித் கிங்ஸ் அணியும், உசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணியும் விளையாடி வருகின்றனர். இந்த போட்டியை காண 3500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர்.புதுச்சேரி வரலாற்றில் ஒரே இடத்தில் நடக்கும் விளையாட்டு போட்டியில் இத்தகைய ரசிகர்கள் திரளாக வருவது இதுவே முதல் முறை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி