உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தால் புதுச்சேரி வளர்ச்சி அடையும்: முதல்வர் ரங்கசாமி

மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தால் புதுச்சேரி வளர்ச்சி அடையும்: முதல்வர் ரங்கசாமி

காரைக்கால் : காரைக்கால் மாவட்டத்தில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து இரண்டாவது நாளாக முதல்வர் ரங்கசாமி பல்வேறு இடங்களில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.காரைக்கால் மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து, கடந்த இரண்டு நாட்களாக கோட்டுச்சேரி, நெடுங்காடு, காரைக்கால் வடக்கு மற்றும் மீனவ கிராமங்களில் முதல்வர் ரங்கசாமி ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.பிரசாரத்தில் பா.ஜ., மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சிசுந்தரம், மாநில துணை தலைவர் ராஜசேகரன், பா.ம.க., மாவட்ட செயலாளர் பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏ., கணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பிரசாரத்தில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தால் புதுச்சேரி வளர்ச்சியடையும். பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்த முடியும். தற்போதைய ஆட்சியில் மீனவர்களுக்கு மானியத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.எதிர்க்கட்சி வரிசையில் உள்ள காங்., கட்சியினர் எதையும் லோக்சபாவில் பேசி சாதிக்கவில்லை.ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குடும்ப தலைவிக்கு ரூ.௧௦௦௦, பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரம், மாணவர்களுக்கு கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மீனவ மக்களுக்கு ஆண்டுக்கு 128 கோடி ரூபாய் மதிப்பில் டீசல் மானியம், மழைக்காலம் நிவாரணம், தடைக்காலம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.எனவே, பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து ஓட்டளிக்க வேண்டும். தாமரை சின்னத்திற்கு ஓட்டு அளித்து அமோக வெற்றியை தேடி தர வேண்டும்.இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ