உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பழங்கால நாணயம் விற்க ஆசைப்பட்டு ரூ.1.75 லட்சம் இழந்த புதுச்சேரி பெண்

பழங்கால நாணயம் விற்க ஆசைப்பட்டு ரூ.1.75 லட்சம் இழந்த புதுச்சேரி பெண்

புதுச்சேரி : பழங்கால நாணயங்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய ஆசைப்பட்ட பெண், 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை சைபர் கிரைம் கும்பலிடம் இழந்தார். புதுச்சேரி, புதுசாரம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் பேஸ் புக்கில் பழங்கால நாணயங்களுக்கு அதிக விலை தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதிலிருந்த மொபைல் எண்ணை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அதில் பேசிய நபர் பழங்கால நாணயங்களை வாங்கி கொள்வதாகவும், அதற்கு கட்டணம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளார். இதை நம்பிய மகேஸ்வரி, அவருக்கு 1 லட்சத்து 75 ஆயிரத்து 819 ரூபாய் அனுப்பி ஏமாந்தார். இதேபோன்று, ரெட்டியார்பாளையம் ரஜினி குப்தா என்பவர், ஆன்லைன் மூலம் 649 ரூபாய்க்கு பொருள் ஒன்று ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து, ரஜினியை தொடர்பு கொண்ட மர்மநபர், டெலிவரி ஏஜென்சியில் இருந்து பேசுவதாகவும், அவர் வாங்கிய பொருளுக்கு பரிசு விழுந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.அந்த பரிசை பெற கூடுதல் பணம் செலுத்த வேண்டுமென கூறினார். இதை நம்பிய, ரஜினி, 51 ஆயிரத்து 695 ரூபாய் செலுத்தி இழந்தார். இதேபோல், லாஸ்பேட்டை அறிவுடைநம்பி என்பவர், 9 ஆயிரத்து 400 ரூபாயை மோசடி கும்பலிடம் ஏமாந்தார். இவர்கள் மூவரும் 2 லட்சத்து 36 ஆயிரத்து 914 ரூபாய் இழந்துள்ளனர். புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை