ஒழுங்குமுறை விற்பனை கூடம் மாற்றம் ராஜிவ் யுவகேந்திரா கோரிக்கை
புதுச்சேரி : ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில், சட்டசபை கட்டடம் மற்றும் தலைமை செயலகம் வருவது உறுதி செய்யப்பட்டால் அதை, இ.சி.ஆர்., அல்லது கோரிமேடு சாலையில் மீண்டும் இயங்கச் செய்ய ராஜிவ் யுவகேந்திரா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.அமைப்பு நிறுவனர் வெங்கடாசலபதி வெளியிட்ட அறிக்கை:தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் புதுச்சேரி அரசு தலைமை செயலகம் மற்றும் சட்டசபை செயலகம் கட்டுவதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.இந்த பகுதியில் உள்ள, இதர துறைகளான குடிமை பொருள் வழங்கல் துறை, அரசு அச்சகத்துறை, கலால்துறை, வேளாண்துறை ஆகியவை மக்களோடு தொடர்புடைய அரசு அலுவலகங்கள் ஆகும். இந்த துறைகள் இடமாற்றம் செய்தாலும் மக்கள் அதை நாடிச்செல்ல வேண்டியது கட்டாயமாகும்.ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். புதுச்சேரி மையப்பகுதியான தட்டாஞ்சாவடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம், புதுச்சேரி மற்றம் தமிழக விவசாயிகளுக்கு எளிதான போக்குவரத்து வசதி கொண்ட பகுதி.எனவே, ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில், சட்டசபை கட்டடம் மற்றும் தலைமை செயலகம் வருவது உறுதி செய்யப்பட்டால், ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை, இ.சி.ஆர்., அல்லது கோரிமேடு சாலையில் மீண்டும் இயங்கச்செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.