உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஞ்சவடீ கோவிலில் ராம நவமி உற்சவம்

பஞ்சவடீ கோவிலில் ராம நவமி உற்சவம்

புதுச்சேரி : பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமி உற்சவம் நடந்தது.புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் உள்ள பஞ்சவடீ பஞ்சமூக ஆஞ்சநேயர் கோவிலில் எழுந்தருளி உள்ள சீதா சமேத ராமச்சந்திர மூர்த்தி சன்னதியில், ராமநவமி உற்சவம் நேற்று நடந்தது.முன்னதாக கடந்த 13ம் தேதி முதல் நேற்று காலை வரை யாகசாலையில் சிறப்ப ஹோமங்கள் 7 காலம் நடந்தது. கடந்த 14ம் தேதி முதல் நேற்று வரை காலை மற்றும் மாலையில் ராமச்சந்திர மூர்த்திக்கு சிறப்பு லட்சார்ச்சனை நடந்தது.ஏழாம் கால யாகசாலை பூஜை நேற்று காலை 8:30 மணிக்கு முடிந்து, 36 அடி உயர ஆஞ்சநேய சுவாமிக்கு 2,000 லிட்டர் பால் அபிேஷகம், வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.யாகசாலையில் இருந்து மகா பூர்ணாஹூதி முடிந்து, கடம் புறப்பட்டு, ராமர் சன்னிதி மற்றும் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடந்தது. பின்பு அலங்காரம் செய்து நடை திறந்தவுடன், வேதகோஷம், சோடச உபசாரம், சாற்றுமுறை நடந்தது.மாலை 4:30 மணிக்கு சீதாராம திருக்கல்யாண உற்வசம் நடந்தது. காலையில் 'அயோத்தி ராமனும், அஞ்சனை மைந்தனும்' என, தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசியின் சொற்பொழிவு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ