தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்
அரியாங்குப்பம் : தீ விபத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, சபாநாயகர் செல்வம் நிவாரணம் வழங்கினார்.மணவெளி தொகுதி, தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் கஜலட்சுமி. இவரது கூரை வீடு கடந்த 16ம் தேதி, தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தது.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம், வழங்கப்பட்ட நிவா ரண நிதியுதவியை, சபாநாயகர் செல்வம், பாதிக்கப் பட்டவருக்கு வழங்கினார். தாசில்தார் பிரித்திவி, வருவாய் ஆய்வாளர் தன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.