உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கம்போடியா நாட்டில் சிக்கிய 2 புதுச்சேரி இளைஞர்கள் மீட்பு

கம்போடியா நாட்டில் சிக்கிய 2 புதுச்சேரி இளைஞர்கள் மீட்பு

புதுச்சேரி : கம்போடியா நாட்டிற்கு சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட இரண்டு புதுச்சேரி இளைஞர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.புதுச்சேரி லாஸ்பேட்டை சேர்ந்த குணசீலன், அய்யங்குட்டிப்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் ஆகியோர் கம்போடியா நாட்டில் நல்ல சம்பளத்தில் வேலை எனக் கூறி, அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சென்றபிறகுதான் சட்ட விரோதமாக கம்போடியா நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டது தெரிய வந்தது.அதையடுத்து இருவரது கும்பத்தினரும் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பத்திரமாக மீட்டு தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் முதல்வர் ரங்கசாமி உரிய நடவடிக்கை எடுத்து, கம்போடியா நாட்டில் இருந்து அவர்களை பத்திரமாக மீட்டு அரசு செலவில் புதுச்சேரிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார். புதுச்சேரிக்கு திரும்பிய இருவர்களில் பிரகாஷ் தனது குடும்பத்தினருடன் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை