வாசகர்கள் கருத்துகள் ( 1 )
டாக்டர். சாமிநாதன் மற்றும் குழுவினரின் இந்த செயல் இறைவனுக்கு செய்த செயல். நன்றியுடன்
விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உயிரிழறந்த ஆதரவற்ற நபருக்கு, மருத்துவர்களே இறுதிச்சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விருத்தாசலம் காந்தி நகரை சேர்ந்தவர் சிவக்குமார், 50. ஜவுளி கடை ஊழியர். நீரிழிவு நோய் பாதிப்பு காரணமாக அவ்வப்போது, அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த நான்கு நாட்களுக்கு முன் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சிவக்குமார் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில், சிவக்குமாரின் உடலை அடக்கம் செய்ய போதிய வசதியில்லை என உறவினர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த தலைமை மருத்துவர் சாமிநாதன், அரசு மருத்துவமனை சார்பில் இறுதிச்சடங்கு செய்து, நல்லடக்கம் செய்ய தீர்மானித்தார். அதன்படி, நேற்று பிரேத பரிசோதனை முடிந்ததும், சிவக்குமார் சடலத்துக்கு மாலை அணிவித்து பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் இறுதிச்சடங்கு செய்து, நகராட்சி மின் மயானத்தில் தகனம் செய்தனர். சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பழனி உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள் உடனிருந்தனர். ஆதரவற்ற நபரின் உடலுக்கு அரசு மருத்துவமனை ஊழியர்களே இறுதிச்சடங்கு செய்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
டாக்டர். சாமிநாதன் மற்றும் குழுவினரின் இந்த செயல் இறைவனுக்கு செய்த செயல். நன்றியுடன்