மேலும் செய்திகள்
50 சதவீத இடங்களை பெற மக்கள் கழகம் கோரிக்கை
25-Aug-2024
புதுச்சேரி : புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். சேர்மன் வெங்கட்டராமன் முன்னிலை வகித்தார். மாநிலச் செயற்குழு, மகளிர் அணி, ஆதிதிராவிடர், மீனவர் அணி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.பொதுச்செயலாளர் ராஜன் வரவேற்றார்.கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி, புதுச்சேரி காரைக்காலிலும் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. போராட்டபொறுப்பாளர்களாக இளங்கோவன், விமலா பெரியாண்டி, பரந்தாமன், ரஞ்சித் குமார் , சிவகுமாரன், தினகரன், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும் குறைந்தபட்ச 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற அரசாணை பிறப்பிக்க பட வேண்டும்.காரைக்கால் பின்தங்கிய மாவட்டமாக அறிவித்து அதற்கான சிறப்பு நிதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் அணித்தலைவர் சந்திரன், உதவி செயலாளர் ஆண்டாள், காலாப்பட்டு நிர்வாகி குமார், இதயவேந்தன்,சேகர்,வேல் விஜயன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொருளாளர் பெண்ணியம் செல்வகுமாரி நன்றி கூறினார்.
25-Aug-2024