உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எல்.ராய் பிசியோதெரபி மையத்தில் ரோபோட்டிக் பிசியோதெரபி முகாம்

எல்.ராய் பிசியோதெரபி மையத்தில் ரோபோட்டிக் பிசியோதெரபி முகாம்

புதுச்சேரி : எல். ராய் பிசியோதெரபி மறுவாழ்வு மையம் சார்பில் இலவச ரோபோட்டிக் பிசியோதெரபி முகாம், வரும் 13ம் தேதி வரை நடக்கிறது.புதுச்சேரி வெங்கட்டா நகரில் எல்.ராய் பிசியோதெரபி மறுவாழ்வு மையம் இயங்கி வருகிறது. உலக பிசியோதெரபி தினத்தையொட்டி, இம் மையத்தின் சார்பில், வலி மற்றும் வாதத்திற்கான இலவச ரோபோட்டிக் பிசியோதெரபி சிகிச்சை முகாம் நேற்று துவங்கியது. இந்த மருத்துவ முகாம் வரும் 13ம் தேதி வரை நடக்கிறது.முகாமில், அதி நவீன முறையில், ரோபோட்டிக் பிசியோதெரபி சிகிச்சை மூலம், எலும்பி முறிவுக்கான பிந்தைய பயிற்சிகள், மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பயிற்சிகள், பக்கவாதம், தண்டுவட நரம்பு பாதிப்புகள், ஆர்த்ரைட்டிஸ், பார்கின்சன் டிசீஸ் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ரோபோட்டிக் பிசியோதெரபி பயிற்சி மூலம் மருத்துவ சிசிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், 9944365442 எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை