மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
10 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
10 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
10 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
10 hour(s) ago
புதுச்சேரி: கடந்த நிதியாண்டில் புதுச்சேரியில் 2,628 கோடி ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கப்பட்டது என, மத்திய ஜி.எஸ்.டி., ஆணையர் பத்மஸ்ரீ பேசினார்.ஜி.எஸ்.டி., அமுல்படுத்தப்பட்ட 7ம் ஆண்டு தின விழா புதுச்சேரியில் உள்ள மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் கலால் வரி ஆணையரகம் சார்பில் ஓட்டல் அதிதியில் கொண்டாடப்பட்டது.விழாவில் தலைமை தாங்கிய மத்திய ஜி.எஸ்.டி., ஆணையர் பத்மஸ்ரீ பேசியதாவது:நாட்டின் பொருளாதாரத்தில் ஜி.எஸ்.டி., பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏப்ரல் 2024ல் ஜி.எஸ்.டி., வருமானம் 21.1 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதை நாம் பார்க்க வேண்டும். இது 2024-25 நிதியாண்டில் வரி சேகரிப்பு ஏறுமுகமாக இருக்க போவதற்கான சாத்தியத்தை காட்டியுள்ளது.கடந்த 2019ல் ஜி.எஸ்.டி., மீதான பொதுமக்களின் ஏற்றுக்கொள்ளும் தன்மை 59 சதவீதாக இருந்தது. 2023 இல் 84 சதவீதமாக இந்த நம்பிக்கை உயர்ந்துள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. புதுச்சேரி மாநிலத்தினை பொருத்தவரை மத்திய மற்றும் மாநில ஜி.எஸ்.டி., வரிகளை சேர்த்து 2023-24 நிதியாண்டில் நிதி சேகரிப்பு 2,628 கோடியாக இருந்தது. இந்த வரி சேகரிப்பு கடந்தாண்டை ஒப்பீடும்போது 11 சதவீதம் அதிகரித்துள்ளது' என்றார்.அமைச்சர் லட்சுமி நாராயணன் சிறப்புரையாற்றி, அதிக ஜி.எஸ்.டி., வரி கட்டிய புதுச்சேரியை சேர்ந்த நிறுவனங்களான சுந்தரம் பாஸ்டனர்ஸ், இந்துாஸ்தான், கோத்ரேஜ், ரெக்லோ, ஆர்னி இன்ஜினியரிங், பி.எஸ்.என்.எல்., காரைக்காலை சேர்ந்த வின்னர்ஸ் பேக்கரி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார்.கடந்த 2023-24 நிதியாண்டில் சிறப்பாக பணியாற்றிய ஜி.எஸ்.டி., அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கட்டுரை போட்டியில் பங்கு பெற்ற கல்லுாரி மாணவர்கள் ஐந்து பேருக்கு பாராட்டும், சான்றிதழ்கள் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை செயலர் சரத்சவுகான், மாநில ஜி.எஸ்.டி., ஆணையர் முகமது மன்சூர், கூடுதல் ஆணையர் பிரஷாந்த் குமார் காக்கர்லா மற்றும் தொழில் துறையினர் கலந்து கொண்டனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago