உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 7 பேரிடம் ரூ.7.96 லட்சம் அபேஸ் சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

7 பேரிடம் ரூ.7.96 லட்சம் அபேஸ் சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

புதுச்சேரி: புதுச்சேரியில் 7 பேரிடம் நுாதன முறையில் 7.96 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரை மர்ம நபர் ஒருவர் டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி அவர், 43 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்து ஏமாந்தார்.இதே போல், புதுச்சேரியை சேர்ந்த வினித் 43 ஆயிரம் ரூபாய், கூடப்பாக்கம் புனிதவள்ளி 85 ஆயிரம், ஒயிட் டவுன் பகுதி சமீத் மிர்சா 83 ஆயிரம், முதலியார்பேட்டை பகுதி ராஜாராமன், 54 ஆயிரம், வில்லியனுார் பகுதி சதீஷ் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தனர். மேலும், காரைக்காலை சேர்ந்த மணிவாசகன், இவர் பங்கு சந்தையில் முதலீடு செய்வது தொடர்பாக வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்தார். அதில், அவர் 4.40 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார். காரைக்காலை சேர்ந்த சாருமதி என்பவரிடம் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, லக்னோ போலீசில் போல் பேசி, மிரட்டி, 1.9 லட்சம் ரூபாயை அபேஸ் செய்தார்.தவளக்குப்பம் நல்லவாடு பகுதியை சேர்ந்தவர் எழில்ராஜன். இவரிடம் மொபைலின் பேசிய நபர், குறைந்த வட்டிக்கு பணம் தருவதாகவும், அதற்கு மூன் பணம் செலுத்த வேண்டும் என கூறினார். அதை நம்பி அவர் 24 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். இதுகுறித்து புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ