மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
27 minutes ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
27 minutes ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
38 minutes ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
39 minutes ago
புதுச்சேரி : புதுச்சேரியில் 13 பேரிடம் 95.29 லட்சம் ரூபாயை அபகரித்த மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஜெயந்த். இவர் குடும்பத்துடன் திருப்பதி செல்ல ஆன்லைனில் டூர் பேக்கேஜ் தேடினார். ஆன்லைனில் கிடைத்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, டூர் பேக்கேஜ் முன் பதிவுக்காக ரூ. 25 ஆயிரம் செலுத்தி ஏமாந்தார். அரியாங்குப்பம் இளம்பரிதி, பேஸ்புக்கில் குறைந்த விலைக்கு ஏ.சி. விற்பனை என்ற விளம்பரத்தை பார்த்தார். அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு ரூ. 10 ஆயிரம் செலுத்தி ஏ.சி. ஆர்டர் கொடுத்து ஏமாந்தார்.லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். நேரு வீதியில் புத்தக நோட்டு புக் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர்கள் ஆன்லைன் வர்த்தக செயலி மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என, தெரிவித்தனர். நண்பர்கள் பரிந்துரை செய்த ஆன்லைன் வர்த்தக செயலி மூலம் முதலீடு செய்தார். 92 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்த பின்பு, தன்னுடைய பணத்தை எடுக்க முயற்சித்தார். பணத்தை எடுக்க முடியாமல் முடங்கியது. விசாரணையில், அது போலியான வர்த்தக செயலி என தெரியவந்தது. பனித்திட்டைச் சேர்ந்தவர் அஸ்வின். இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் பைனான்ஸ் நிறுவன ஊழியர் போல் பேசினார். குறைந்த வட்டிக்கு 5 லட்சம் ரூபாய் வரை கடன் தருவதாகவும், கடன் பெற செயலாக்க கட்டணம் செலுத்த கூறினார். இதை நம்பி அஸ்வின் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் 1.49 லட்சம் பணம் அனுப்பி ஏமாந்தார். கோரிமேட்டைச் சேர்ந்த இருதயராஜ் சார்லஸ். இவருக்கு, வங்கியில் இருந்து வந்ததுபோன்ற ஒரு மெசேஜ் வந்தது. அதில், உள்ள லிங்க் உள்ளே சென்று வங்கி ஐ.டி., பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை பதிவு செய்தார். அவரது கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து 50 ஆயிரம் எடுக்கப்பட்டது. இதுபோல் புதுச்சேரியில் 13 பேரிடம் மொத்தம் 95.29 லட்சம் ரூபாயை மோசடி கும்பல் அபகரித்தது. இது குறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.
27 minutes ago
27 minutes ago
38 minutes ago
39 minutes ago