உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாகர் கவாச் ஒத்திகை

சாகர் கவாச் ஒத்திகை

புதுச்சேரி : தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில், சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.இந்திய கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில், ஆண்டும் தோறும் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை இரண்டு முறை நடத்தப்படுகிறது. அதன்படி, புதுச்சேரியில், சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.இதில், கடலோர பாதுகாப்பு படையினர் படகுகள் மூலம் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். சந்தேகத்திற்கிடமான நபர் குறித்து, தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநில, மத்திய அரசு அலுவலக கட்டடங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. பல்கலைக்கழக மதில் சுவர் ஏறிய ஒருவரை கைது செய்தனர். தொடர்ந்து, நேற்று இரண்டாவது நாளாக சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை