உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பி.ஆர்.டி.சி., ஒப்பந்த டிரைவர், கண்டக்டர்களுக்கு சம்பளம் உயர்வு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

பி.ஆர்.டி.சி., ஒப்பந்த டிரைவர், கண்டக்டர்களுக்கு சம்பளம் உயர்வு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: பி.ஆர்.டி.சி., ஒப்பந்த டிரைவர்கள், கண்டக்கடர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக் கையை ஏற்று, ஒப்பந்த ஓட்டுநர்களின் மாத ஊதியம் 10,804 ரூபாயில் இருந்து 16,796 ரூபாயாகவும், ஒப்பந்த நடத்துனர்களின் மாத ஊதியத்தை 10,656 ரூபாயில் இருந்து, 16,585 ரூபாயாகவும் உயர்த்தி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.உயர்த்தப்பட்ட இந்த மாத ஊதியத்திற்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி, போக்குவரத்து ஆணை யரும், புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக மேலாண் இயக்குன ருமான சிவக்குமாரிடம் வழங்கினார். ஊதிய உயர்வு ஜூன் மாதத்தில் இருந்து அமலுக்கு வருகிறது என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். சபாநாயகர் செல்வம், பி.ஆர்.டி.சி., அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை