உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சங்கர்ஸ் வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

சங்கர்ஸ் வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

வில்லியனுார்: ஸ்ரீ சங்கர்ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. வில்லியனுார் மேலண்டை வீதியில் உள்ள ஸ்ரீசங்கர்ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவி கீர்த்தனா 571 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். மாணவர் நித்தீஷ்குமார் 557, மாணவி ேஷசுப்பிரியா 556, மதிப்பெண்கள் எடுத்து முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்தனர்.பள்ளியில் பாடவாரியாக தமிழ்- 98, ஆங்கிலம்- 89, கணிதம்- 100, இயற்பியல்-96, வேதியியல்-98, உயிரியல்-94, கம்ப்யூட்டர் சயின்ஸ்-100, காமர்ஸ்- 95, எக்னாமிஸ்-97, அக்கோன்டன்ஸ்-97, கம்யூ., அப்பிலிகேஷன்-99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 500க்கு மேல் மேல் 19 பேர், 450க்கு மேல் 14 பேர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.அவர்களை பள்ளி கல்வி குழுமத்தின் தலைவர் சத்தியகுமாரி கோவிந்தராஜன், நிர்வாகி விஜயலட்சுமி, பள்ளி முதல்வர் சுகந்தி, பெற்றோர் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி, துணை முதல்வர் அஸ்வினி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சரவணன், மேலாளர் சுந்தரகணேஷ் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ