உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திண்டிவனம்-கிருஷ்ணகிரி சாலையை 4 வழிச் சாலையாக மாற்ற வேண்டும் செல்வகணபதி எம்.பி.,கோரிக்கை

திண்டிவனம்-கிருஷ்ணகிரி சாலையை 4 வழிச் சாலையாக மாற்ற வேண்டும் செல்வகணபதி எம்.பி.,கோரிக்கை

புதுச்சேரி: பெங்களூருவை இணைக்கும் திண்டிவனம்-கிருஷ்ணகிரி சாலையைநான்கு வழிச் சாலையாக மாற்றியமைக்க வேண்டுமென மாநிலங்களவையில் செல்வகணபதி எம்.பி., கோரிக்கை வைத்துள்ளார்.சென்னை- பெங்களூரு வரையிலான 258 கி.மீ துார தேசிய விரைவுச் சாலை திட்டத்தின் மூலம் இரண்டரை மணி நேர பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.தற்போது, கிருஷ்ணகிரி- ஓசூர் வழியாக பெங்களூருக்கு ஆறு வழிச் சாலை உள்ளது. கடலுா்- புதுச்சேரி வழியாக கிருஷ்ணகிரிக்கு செல்லும் 187 கி.மீ தேசிய நெடுஞ்சாலை, இரண்டு வழிசாலையாக உள்ளதால், சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வார இறுதி நாட்களில், திண்டிவனம், கிருஷ்ணகிரி இடையேயான சாலை முழுதும் ஆம்னி பஸ்கள் நிரம்பி வழிகிறது.எனவே, போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, அதற்கு நிரந்தர தீர்வாக திண்டிவனம்- கிருஷ்ணகிரி வரையிலான இருவழிச் சாலையை, நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும்.இச்சாலைத் திட்டத்தின் விரிவாக்கம் தற்போது திட்டமிடப்படா விட்டால், வீட்டு மனைகளின் காரணமாக, எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்வது மிகவும் கடினமாகிவிடும்.எனவே, திண்டிவனம்- கிருஷ்ணகிரி வரையிலான இருவழிப் பாதையை, நான்கு வழிச் சாலையாக மாற்றுவதற்கு மத்திய நெடுஞ்சாலை அமைச்சர் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ