உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூத்த குடிமக்கள் நல வாழ்வு சங்க பல் மருத்து சிகிச்சை

மூத்த குடிமக்கள் நல வாழ்வு சங்க பல் மருத்து சிகிச்சை

புதுச்சேரி: பாண்டிச்சேரி மூத்த குடிமக்கள் நல வாழ்வு சங்கம் சார்பில், சங்க உறுப்பினர்களுக்கு பல் மருத்துவ சிசிச்சை அளிக்கப்பட்டது.பாண்டிச்சேரி மூத்த குடிமக்கள் நல வாழ்வு சங்கம் மற்றும் மகாத்மா காந்தி, மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனை இணைந்து, சங்க உறுப்பினர்களுக்கு பல் மருத்துவ சிகிச்சை முகாமை ஏற்பாடு செய்தனர்.மகாத்மா காந்தி, பல் மருத்துவக் கல்லுாரியில் நடந்த முகாமில், கல்லுாரி முதல்வர் கென்னடிபாபு தலைமை தாங்கினார். மருத்துவர் லெனின் முன்னிலை வகித்தார். சங்க தலைவர் தேவநாதன், பொதுச் செயலாளர் வேணுகோபால், செயலாளர் செல்வராஜி, செயற்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், வீரப்பன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். முகாமில், சங்க உறுப்பினர்களுக்கு பல், சுத்தம் செய்தல், பல் அடைத்தல் உள்ளிட்ட பல் தொடர்பான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ