மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
10 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
10 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
10 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
10 hour(s) ago
புதுச்சேரி : பெண்ணை மானபங்கம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரியைச் சேர்ந்த 47 வயது பெண் கடந்த 28ம் தேதி காலை நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வந்த நபர், அப்பெண்ணை மானபங்கம் செய்து விட்டு தப்பிச் சென்றார். பைக் நம்பர் மற்றும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி., கேமரா காட்சிகளுடன், அப்பெண் கோரிமேடு போலீசில் புகார் அளித்தார்.போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது, பெண்ணை மானபங்கம் செய்தது, சொக்கநாதன்பேட்டை, சிவலிங்கம் மகன் அசோக்குமார், 21, என்பதும், கடந்த சில மாதத்திற்கு முன், கல்லுாரியில் பட்ட படிப்பு முடித்து வீட்டில் இருந்து வருவது தெரியவந்தது.அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நடந்து செல்லும் பல பெண்களிடம் அசோக்குமார் இதுபோல் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டு வந்ததும், தற்போது சி.சி.டி.வி. கேமிரா மூலம் சிக்கியது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அசோக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago