மேலும் செய்திகள்
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
18 hour(s) ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
18 hour(s) ago
அரசு பள்ளியில் கழிவறை திறப்பு
18 hour(s) ago
வாய்க்கால் அமைக்கும் பணி
18 hour(s) ago
புதுச்சேரி, : பிறந்த நாள் விழாவிற்கு சென்று திரும்பிய சப்இன்ஸ்பெக்டரின் மகள் திடீரென உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி மடுவுபேட், மெயின்ரோடு, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 59; போக்குவரத்து போலீஸ் சப்இன்ஸ்பெக்டர். இவரது மகள் சுனந்தா, 34; தட்டாஞ்சாவடி முருகா தியேட்டர் அருகில் உள்ள டேட்டா மேட்டிக்ஸ் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வந்தார். மகன் சசிதரன் வினோபா நகர் மெடிக்கல் கம்பெனியில் பணியாற்றினர்.நேற்று முன்தினம் மதியம் பிறந்த நாள் விழாவுக்கு சென்ற சுனந்தா, இரவு 8:30 மணிக்கு வீடு திரும்பினார். அதிகாலை 3:30 மணிக்கு நெஞ்சு வலிப்பதாக சுனந்தா கூறினார். அவரது பெற்றோர் சுனந்தாவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சிகிச்சை அளித்தனர். சில நிமிடத்தில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். காலை 5:00 மணிக்கு வீட்டில் சுனந்தா மயங்கி கிடந்தார். சுனந்தாவை அவரது பெற்றோர் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago