மேலும் செய்திகள்
வக்கறிஞரை மிரட்டியவருக்கு போலீஸ் வலை
28-Aug-2024
நெட்டப்பாக்கம் : தாய் இறந்த துக்கத்தில் மகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.நெட்டப்பாக்கம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் கேசவன் 57, சீறுநீரக கல் நோயால் பாதிக்கப்பட்ட கேசவன் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து வந்தார். இதற்கிடையில் இவரது தாய் காசியம்மாள் கடந்த மாதம் 20ம் தேதி இறந்துவிட்டார். இதனால் கேசவன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று முன்தின்தினம் இரவு சிமென்ட் ஷீட் வேயப்பட்ட இரும்பு பைப்பில் நைலான் கயிற்றால் கேசவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
28-Aug-2024