உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தென்மண்டல ஸ்கேட்டிங் போட்டி

தென்மண்டல ஸ்கேட்டிங் போட்டி

புதுச்சேரி: தென்மண்டல அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. புதுச்சேரி, பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளி, கலாம் ரோலர் ஸ்கேட்டிங் கிளப் சார்பில் தென்மண்டல அளவிலான ஸ்கேட்டிங் போட்டி, லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானத்தில் நடந்தது. போட்டியை பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளி முதல்வர் புவனா வாசுதேவன் துவக்கி வைத்தார். குவாட், இன்லைன், அட்ஜஸ்டபிள், ரோடு ரேஸ், பேன்சி இன்லைன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஸ்கேட்டிங் போட்டிகள் நடந்தன. புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் வீரர்கள் கலந்து கொண்டனர்.இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில், கலாம் ரோலர் ஸ்கேட்டிங் கிளப் தலைவர் வெங்கடேசன், செயலாளர் காமேஷ்வரன் பரிசுகள் வழங்கினர். கிளப் நிர்வாகிகள், பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி